காவிரி விவகாரத்தில் திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே அணைகட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், விவசாயிகளுடைய நலனை முன்னிறுத்தியும், திமுக சார்பில் ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் நியாயமான உணர்வுகளை பிரதிபலிக்கும் நோக்கோடு நடைபெறவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில், மஜக பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
