Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் டூவீலர் மீது லாரி மோதி விபத்து… 2 பேர் பலி…

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற டூவீலர்களின் மீது திருமயம் நோக்கி வந்த டிப்பர் லாரி மோதி விபத்தானது. இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் குறிச்சிபட்டியைச் சேர்ந்த தன்ராஜ் (40) மற்றும் அடுகபட்டியைச் சேர்ந்த வீரையா (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமயம் போலீசார் 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு  ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர்  தலைமறைவான நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!