மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள நலசோபாராவில் ‘இம்பீரியல் ஹைட்ஸ்’ என்ற 14 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஃபல்குனி ஷா (50) மற்றும் அஸ்வினி பார்க்கர் (50) ஆகிய இரு பெண்கள் உயிரிழந்தனர். அதிக புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு சுமார் 25 பேரை பத்திரமாக மீட்டனர்.
தீ விபத்தில் 2 பெண்கள் பலி, 6 பேர் மருத்துவமனையில் அட்மிட்
