Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அனுமதி பெற்ற பட்டாசு கடைகளை உடையார் பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு…

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட தத்தனூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசு கடை நடத்த அனுமதி பெற்ற பட்டாசு கடைகளை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மனோகரன் தலைமையில் வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பாதுகாப்பு விதிகளில் கூறப்பட்டுள்ள தீயணைப்பு துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள்

வழங்கிய ஆவணங்கள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்தனர். மேலும் பட்டாசு கடையில் பாதுகாப்பு உபகரணங்கள், தீயணைப்பு கருவிகள், அவசர வழி ஆகியவை முறையாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அரசு விதிகளை முறையாக கடைபிடிக்காத கடை உரிமையாளர்கள் மீது

கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும் தவறான விண்ணப்பங்களை சமர்ப்பித்து உரிமம் கோரப்பட்டால் கடை உரிமம் ரத்து செய்யப்படுவதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். மேலும் பண்டிகை காலம் நெருங்கி வருவதால் தற்காலிக கடை உரிமம் கோரி விண்ணப்பிக்கும் கடைகள் குறித்து முழு ஆய்வு செய்யப்பட்டு உரிய அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

error: Content is protected !!