Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உதகை மலை ரயில் சேவை 5 நாட்களுக்கு ரத்து

மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் சேவை நவம்பர் 14 முதல் 18-ம் தேதி வரை மேலும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 13-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தக் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், குன்னூர் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 23-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக, மேட்டுப்பாளையம் – குன்னூர் மலை ரயில் பாதையில் சுமார் 65 இடங்களில் கடும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் தண்டவாளத்தின் மீது பெரிய பாறைகள், கற்கள் மற்றும் மரங்கள் விழுந்ததால் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் இரவு பகலாகச் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பாறைகள் மற்றும் மண் அகற்றப்பட்டுத் தண்டவாளம் சீரமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மலை ரயில் சேவை தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருவதால், உதகைக்குச் சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட நாட்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு செய்த பயணிகளுக்கு முழுக் கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது எஞ்சியுள்ள இடங்களில் தண்டவாளச் சீரமைப்பு மற்றும் பாறைகளை அகற்றும் பணிகளை ரயில்வே ஊழியர்கள் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து தண்டவாளத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்ட பிறகே, மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!