தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதை கண்டித்து கோவையில், கோவை மாநகர் மாவட்டம் சார்பில் காந்திபுரத்தில் திமுகவினர் தீவிர சாலை மறியல் – பரபரப்பு
மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றி சென்றதால் பரபரப்பு.
எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கோவையில், கோவை மாநகர் மாவட்ட திமுக

பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன் தலைமையில், திமுகவினர், கோவை காந்திபுரம் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், காந்திபுரம் பகுதி ஸ்தம்பித்தது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் கைதான தகவல் பரவியதைத் தொடர்ந்து, கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பாக உடனடி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி, கோவை காந்திபுரம்

அண்ணா சாலை முன்பாக திரண்ட பல ஆயிரக்கணக்கான திமுகவினர், தமிழக அரசு மற்றும் காவல்துறையைக் கண்டித்து தீவிர கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு, அண்ணா சாலையிலிருந்து திரளான தொண்டர்கள் பேரணியாகப் புறப்பட்டு காந்திபுரம் பிரதான சாலைக்குச் சென்றனர். அங்கு காவல்துறையின் தடையை மீறி, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென நடத்தப்பட்ட இந்தச் சாலை மறியலால், காந்திபுரம் பிரதான சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை குண்டுகட்டாகத் தூக்கியும், தள்ளுமுள்ளு இடையே தரதரவென இழுத்துச் சென்றும் காவல் வாகனங்களில் ஏற்றினர். காவல்துறையின் இந்த அராஜகத்தால் அப்பகுதி போர்க்களமாக மாறியது.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ் செல்வன், திமுக முன்னாள் மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
