சென்னை கிண்டியில் ஆளுநர் அர்லேகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். தவெக எம்எல்ஏ விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்த அவர், சம்பந்தப்பட்ட கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். முன்னதாக, இதே விவகாரத்தில் நடவடிக்கை கோரி டிஜிபி அலுவலகத்திலும் உதயநிதி ஸ்டாலின் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தவெக MLA மீது நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் உதயநிதி புகார்
