இந்தியாவில் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் விளங்கும் 16 முக்கிய கூட்டு மருந்துகளுக்கு (Fixed-dose combination – FDC) ஒன்றிய அரசு அதிரடியாகத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. புது தில்லியில் உள்ள மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அதிரடி உத்தரவின்படி, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாரசிட்டமால் கலந்த சில வலிநிவாரணிகள் மற்றும் தோல் பராமரிப்பு மருந்துகள் உள்ளிட்ட 16 சேர்க்கை மருந்துகள் உடனடியாக தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து எனத் தெரிவித்து 16 முக்கிய கூட்டு மருந்துகளுக்கு (Fixed-dose combination) ஒன்றிய அரசு தடை விதித்து உத்தரவு. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாரசிட்டமால் கலந்த சில வலி நிவாரணி மருந்துகள் (Dicyclomine + Paracetamol), Amoxicillin/Cefuroxime + Serratiopeptidase, சில கற்றாழை சாறு கலந்த தோல் மருந்துகள் என 16 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
