தமிழ் திரையுலகின் பிரபல முன்னணி நடிகரும், அரசியல் களத்தில் தொடர்ச்சியாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருபவருமான மன்சூர் அலிகான், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்த முக்கிய அரசியல் நகர்வு, வரும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி நகரும் தமிழக அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
“தவெகவில் என் இறுதி மூச்சு இருக்கும்வரை பயணிப்பதாகக் கூறி இணைந்திருக்கிறேன்” – நடிகர் மன்சூர் அலி கான் கூறியுள்ளார்.
