Skip to content

மே 25ம் தேதி- யுபிஎஸ்சி முதல்நிலைத்தேர்வு

  • by Authour

இந்தியா முழுவதும் கலெக்டர்,  காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட   குடிமைப் பணிகளில் சேர்வதற்கான  யுபிஎஸ்சி   தேர்வு  அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.  979 பணியிடங்களுகான  பிரிலிமினரி(முதல்நிலை) தேர்வு வரும் மே 25ம் தேதி நடக்கிறது. இன்று முதல் இதற்காக விண்ணப்பிக்கலாம்.  பிப்ரவரி  11ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.

upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  வரும் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் 5 நாட்கள் மெயின் தேர்வுகள் நடத்தப்படும் என யு.பி.எஸ்.சி. தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 1,056 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 979ஆக குறைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!