Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழகத்தில் 11 இடங்களில் சதம் அடித்தது வெயில்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. இன்று (ஏப்ரல் 25, 2026) தமிழகத்தின் 11 முக்கிய நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபொரன்ஹீட்டைக் கடந்து பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலேயே அதிகபட்சமாக வேலூரில் 104.4 டிகிரி வெப்பம் பதிவாகி மக்களை வாட்டி வதைத்தது. இதனைத் தொடர்ந்து மற்ற நகரங்களிலும் வெயில் சதமடித்துள்ளது.

வேலூர்: 104.4°

கரூர் பரமத்தி: 103.1°

ஈரோடு: 102.6°

திருச்சி: 102.4°

தருமபுரி: 102.2°

மதுரை விமான நிலையம்: 102.2°

மதுரை நகர்: 101.8°

திருப்பத்தூர்: 101.7°

நாமக்கல்: 101.3°

சேலம்: 100.8°

திருத்தணி: 100.6°

வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மதிய நேரங்களில் மக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்குமாறும், போதிய அளவு தண்ணீர் மற்றும் திரவ உணவுகளை உட்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

error: Content is protected !!