Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்

ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட மனோஜ் பாண்டியன் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்து சமீபத்தில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். அதேபோல், பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்று குரல் எழுப்பி அ.தி.மு.க.வில் இருந்து வெளியே வந்த செங்கோட்டையன், ஆரம்ப காலக்கட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தங்களை த.வெ.க.வில் ஐக்கியமாக்கி கொண்டனர்.

இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்து தி.மு.க.வில் இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திமுகவில் இணைவதற்கு முன்பு தனது எம்.எல்.ஏ பதவியை வைத்திலிங்கம் ராஜினாமா செய்துள்ளார். ஒரத்த நாடு தொகுதி எம்.எல்.ஏவாக வைத்திலிங்கம் இருந்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!