Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் முருகனுக்கு விபூதி அலங்காரம்… பக்தர்களுக்கு காட்சி..

கரூர் மினி பேருந்து நிலையம் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகனுக்கு தை மாத கிருத்திகை பூஜை விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமி.

தை மாத கிருத்திகை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் இன்று சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மினி பேருந்து நிலைய கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அழகன் ஸ்ரீ முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அழகன் ஸ்ரீ முருகனுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர் ,பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு ,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து அழகன் முருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமி விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு

காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து ஆலயத்தில் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதிய சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

மினி பேருந்து நிலையம் அருகே கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அழகன் ஸ்ரீ முருகனுக்கு தை மாத கிருத்திகை பூஜை சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!