தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் நோயாளிகளிடம் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் பணம் கேட்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டனர். மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1000, பெண் குழந்தை பிறந்தால் ரூ.500 பணம் கேட்பதாக புகார் எழுந்த நிலையில் அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை சோதனை நடத்தியது. அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் வாங்கினால் நடவடிக்கை என அமைச்சர் அருண்ராஜ் எச்சரித்திருந்தார்.
தஞ்சை மிராசுதார் மருத்துவமனையில் விஜிலென்ஸ் சோதனை
