Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் ஒரே நாளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு கூட தமிழ்நாட்டில் பல்வேறு பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் சோதனையானது ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சியின் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் ஓரிரு பகுதிகளில் லஞ்சம் வாங்கப்படுவதாக எழுந்த தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவையில் மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ADSP ராஜேஷ் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் 9 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையின் காரணமாக மத்திய மண்டல அலுவலக நுழைவாயில் பூட்டு போட்டு பூட்டப்பட்டது.

error: Content is protected !!