சென்னை கோவளத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையில் 31வது தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு தொடங்கியது. இதில், மாநிலங்களுக்கு இடையேயான சிக்கல், மாநில பாதுகாப்பு, போதைப் பொருள் தடுப்பு உள்ளிட்ட பல விவகாரங்கள் இதில் விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாகத் தமிழ்நாடு – கர்நாடகா விவகாரம் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையே முதலமைச்சர் விஜயும் கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரும் அருகருகே அமர்ந்துள்ளனர்.
