Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய் முதலமைச்சரானதால் நேர்த்திக்கடன்: கரூரில் மாரியம்மன் கோவிலில் பெண்மணி அலகு குத்தி வழிபாடு!

கரூரில் புகழ்பெற்ற அருள்மிகு மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. 15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், பொதுமக்கள் அக்னி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் எனப் பல்வேறு நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்க வேண்டும் என்று கரூர் அரசு காலனி பகுதியைச் சேர்ந்த கலாவதி என்ற பெண்மணி மாரியம்மன் கோவிலில் வேண்டுதல் வைத்திருந்தார். தற்போது ஜோசப் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளதைத் தொடர்ந்து, தனது வேண்டுதல் பலித்த மகிழ்ச்சியில் அலகு குத்தி விஜய் புகைப்படத்தை கையில் வைத்து பெண்மணி தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளார்.

error: Content is protected !!