அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சரை சந்தித்து அமைச்சர்கள் வாழ்த்து பெற்றனர். முதலமைச்சர் முன்னிலையில் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ் செங்கோட்டையன், வெங்கட்ராமன், ராஜ் மோகன், பிரபு , கீர்த்தனா ஆகியோர் முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது முதலமைச்சர், அமைச்சர்கள் தங்களின் துறைகளில் எப்படி செயல்பட வேண்டும், அரசின் எதிர்ப்பார்ப்பு ஆகியவை குறித்து அறிவுறுத்தியதோடு, அனைவரும் சிறப்பாக செயலாற்றி அரசுக்கு நற்பெயரை உண்டாக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் தங்கள் அறையில் பொறுப்பேற்றுக்கொண்டனர். அமைச்சர் ராஜ் மோகன் அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் பொறுப்பேற்றார். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூபாய் 80.64 கோடி மதிப்பில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், கழிப்பறைகள் குடிநீர் வசதிகள் மற்றும் சுற்று சுவர் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த கோப்பில் கையெழுத்திட்டார் அமைச்சர் ராஜ் மோகன். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிக்காக ஆண் பெண் மாணவர்களுக்கான வகுப்பறைகள் ,விடுதிகள் கட்டுவதற்கு 56 கோடி செலவிடு வகையில் கோப்பில் கையெழுத்திட்டார்.
