தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்றுள்ளார். இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்து இஃப்தார் நோன்பு கலந்து கொண்டார்.
ரமலான் திருநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இஃப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள


தனியார் உணவகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் நோன்பு திறப்பு விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்து கொண்டார்.
நேற்று மாலை 6.22 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் நிகழ்வில் 1000 பேர் கலந்துக்கொண்டு உள்ளனர். நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பிதழ் வைத்துள்ள நபர்களை மட்டுமே உள்ள செல்ல அனுமதித்து உள்ளனர். அழைப்பிதழ் இல்லாத நபர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கவில்லை.
இந்த இப்தார் விருந்தில் கலந்துகொள்ள விஜய் நேற்று முழுதும் விரதம் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தவெக முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் தவெக தலவைர் விஜய் பேசியதாவது.. மத சார்பற்ற கொள்கையில் தவெக உறுதியாக உள்ளது. யாருடனும் எந்த வித சமரசமும் இல்லை. தவெக தலைமையில் தான் ஆட்சி என்பதில் உறுதியாக உள்ளோம். தவெக எந்த டீமிலும் கிடையாது. மக்கள் டீம் தான். கூட்டணி பேச்சுவார்த்தை தகவல்கள் எல்லாம் வதந்தி என முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்.
