Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

2026ல் விஜய் ஆட்சி தவிர்க்க முடியாது-கோவையில் செங்ஸ் பேட்டி

கோவை சர்வதேச விமான நிலையம் வளாகத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துகளை பகிர்ந்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், கட்சித் தலைவர் விஜய் அவர்களின் உரை நாடு வியக்கும் அளவில் இருந்து, புதிய மறுமலர்ச்சியை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் நல்லாட்சி மற்றும் தூய்மையான ஆட்சியை வழங்கும் திறன் தமிழக வெற்றிக் கழகத்துக்கே உள்ளது என்றும், பெண்களுக்கு முழு பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் அரசாக அது அமையும் என்றும் கூறினார். நீண்ட காலமாக ஆட்சி செய்து வருபவர்களை விட புதிய ஆட்சி வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்கால தமிழகம் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக அமையும் வகையில் விஜயின் அரசியல் பயணம் அமையும் என தெரிவித்தார். 2026ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் ஆட்சியில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; மக்கள் ஆதரவு அவருக்கு உள்ளது என்றும் உறுதிபடக் கூறினார்.

தான் கோபியில் எட்டு முறை, சத்தியமங்கலத்தில் ஒருமுறை என மொத்தம் ஒன்பது முறை வெற்றி பெற்றுள்ளதாக கூறிய செங்கோட்டையன், தற்போது கோபி தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த 40 ஆண்டுகளாக மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பணியாற்றியுள்ளேன்; மக்களின் தீர்ப்பை எப்போதும் ஏற்றுக் கொள்வேன் என்றும் கூறினார்.

பொன்ராஜ் தொடர்பான விவகாரத்தில் இரண்டு நாட்களுக்கு முன் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர் மன்னிப்பு கேட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடுவது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தன்னை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர் எனக் குறிப்பிட்ட அவர், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். இக்கட்சியில் இளைஞர்கள், பெண்கள், படித்தவர்கள் மற்றும் வெளிநாட்டு தமிழர்கள் உள்ளிட்ட பலரின் ஆதரவு அதிகரித்து வருவதாகவும், இது மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்த கருத்துகள் குறித்து, காலம் மாறும்; மக்கள் தீர்ப்பால் அவை அனைத்தும் முறியடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், தலைவர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கமானதே; முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட பலரும் அப்படி போட்டியிட்டுள்ளனர் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

error: Content is protected !!