சென்னை வில்லிவாக்கம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக கார்த்திக் மோகன் தனது எக்ஸ் தளத்தில், “வில்லிவாக்கம் மேற்கு பகுதி 94-வது அ வட்டத்தில், இன்று (09.04.2026) பாரதி நகர், மோப்பிலியம்மன் கோயில் தெரு மற்றும் ரெட்ஹில்ஸ் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரினேன். அனைவரையும் உள்ளடக்கிய நமது கழக அரசின் சிறப்பான திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தபோது, மக்களின் முகங்களில் தெரிந்த மலர்ச்சியும் அமோக வரவேற்பும் நமது வெற்றியை முன்கூட்டியே உறுதிசெய்கின்றன. சிறப்பான மக்கள் பணி தொடர்ந்து நடைபெற, வரவிருக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து எனக்கு உங்களின் முழுமையான ஆதரவைத் தாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
