Skip to content

வினேஷ் போகத் வழக்கில்…. நாளை மறுநாள் தீர்ப்பு

50 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் மோத இருந்த நிலையில் 100 கிராம் எடை கூடியதால், வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு தேர்வு தீர்ப்பாயத்தை நாடினார். வினேஷ் போகத் மனு மீது விசாரணை நடத்திய தீர்ப்பாயம் ஏற்கனவே 2 முறை தீர்ப்பை ஒத்திவைத்தது. வினேஷ் போகத் பதக்க விவகாரத்தில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என தற்போது  அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி பதக்கம் கோரி வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு தேர்வு தீர்ப்பாயத்தை நாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!