Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தேர்தல் விதிமுறை மீறல்.. தர்மபுரி நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

தர்மபுரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சாந்தலட்சுமி போட்டியிடுகிறார். பிரசாரத்தை துவங்குவதற்கு முன்பாக நேற்று முன்தினம் அதியமான்கோட்டையில் உள்ள அதியமான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தர்மபுரி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாந்தலட்சுமி, அதியமான் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அதியமான்கோட்டை கிராம நிர்வாகி அதிகாரி மாது, சுற்றுலா பகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிமுறை மீறி செயல்பட்டதாக நாதக வேட்பாளர் மீது அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் தேர்தல் நடத்தை விதியை மீறியது தொடர்பாக போலீசார் 2 பிரிவின் கீழ் சாந்தலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!