Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

73 பால் பொருள் நிறுவனங்களில் விதிமீறல் – நாடு முழுவதும் ஆய்வு!

 பால், தயிர், நெய், ஐஸ்கிரீம், பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களைத் தயாரிக்கும் 73 நிறுவனங்கள் உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாதது கண்டறியப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் ஆய்வு நடத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அனைத்து மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பால் மற்றும் பால் பொருட்களைத் தயாரிக்கும் 73 நிறுவனங்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

டிக்கெட் புக்

இதையடுத்து, பால், தயிர், நெய், ஐஸ்கிரீம், பன்னீர், பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் கள ஆய்வு நடத்தவும், மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகங்களில் பரிசோதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆய்வு, மாதிரி சேகரிப்பு, பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவு செய்து, விரைந்து முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

பரிசோதனையில் தரக்குறைபாடு உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!