Skip to content

கரூர் விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..

கரூர், தேர் வீதி விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பாலமுருகனுக்கு சித்திரை மாத விசாக அபிஷேகம்.

சித்திரை மாத விசாகத்தை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு சித்திரை மாத விசாகத்தை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பாலமுருகனுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள் ,சந்தனம், அபிஷேக பொடி,அரிசி மாவு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதன் தொடர்ச்சியாக பாலமுருகனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.

தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்த சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சித்திரை மாத விசாக நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!