Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செந்தில் பாலாஜி பணி தொடர எனக்கு வாக்களியுங்கள்: கரூரில் திமுக வேட்பாளர் தியாகராஜன் பிரச்சாரம்

தமிழகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை ஒட்டி கரூர் மாவட்டத்தில் தேர்தல் களத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தியாகராஜன் மண்மங்கலம் ஊராட்சி, ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் சமத்துவபுரம், மேதி நகர்,மேற்கூர், புதுப்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், இராமேஸ்வர பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

திமுக வேட்பாளரை ஆதரித்து செந்தில் பாலாஜியின் சகோதரரும் கரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான அசோக்குமார் பொதுமக்களை சந்தித்து தியாகராஜனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். திமுக வேட்பாளர் மற்றும் அசோக்குமார் ஆகிய இருவருக்கும் மாலை அணிவித்து, வெற்றிவால் பரிசாக வழங்கினர் பொதுமக்கள் அனைவரும் பூக்கள் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திமுக வேட்பாளர் பேசுவையில்:
செந்தில் பாலாஜி பணியினை தொடர்ந்து செய்திட எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்,
மகளிர் உரிமைத் தொகை 2000 கிடைத்திட, கட்டணமில்லா மகளிர் பேருந்து, காலை உணவு திட்டம் கிடைத்திட, நான் முதல்வன் திட்டம் செய்திட உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் எனக் கூறினார்.

error: Content is protected !!