Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலை அருகே திமுக வேட்பாளரை ஆதரித்து .. VSB பிரச்சாரம்

குளித்தலை அருகே கொசூரில் திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சூரியனூர் சந்திரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி கொசூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் கலைஞர் முதன் முதலில் நின்று வென்ற தொகுதி குளித்தலை தொகுதி. வாழ்நாள் முழுவதும் தேர்தலில் தோல்வியை காணாமல் அவர் சட்டசபைக்குச் அனுப்பி வைத்த

பெருமைக்குரிய தொகுதி குளித்தலையாகும். இந்த குளித்தலை தொகுதிக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் செய்துள்ளதார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தான் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதுடன் மட்டுமல்லாமல் கூறாத பல வாக்குறுதி திட்டங்களையும் செயல்படுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர். மீண்டும் அவர் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் மகளிர் உரிமை தொகையை 2000 ஆக உயர்த்தி வழங்குதல், முதியோர் உதவித்தொகை 2500 ஆக முயற்சி வழங்குதல், தமிழ் முதல்வன் நான் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு வளரும் தொகை ஆயிரத்தில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்குதல், மகளிர் அனைவருக்கும் முத்தாய்ப்பாக தங்கள் விரும்பும் பொருட்களை வாங்குவதற்கு ரூபாய் 8000 கூப்பன், வீடு இல்லாத 10 லட்சம் பேருக்கு இலவச கலைஞர் வீடு திட்டம், அடுத்த ஐந்து வருடங்களில் 35 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்குதல் உள்ளிட்டா பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவார் என்றும், கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதி தான் தமிழகத்தில் அதிக அளவு வாக்கு செலுத்திய தகுதியாக உள்ளது. இந்த சட்டசபை தேர்தலிலும் அதிகப்படியான வாக்குகள் அளிக்க வேண்டும் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து திமுக வேட்பாளர் சூரியன் சந்திரனை சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்றும் கூறினார்.

முன்னதாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கிரேன் மூலம் ஆளுயுற மாலை அணிவித்து வரவேற்றனர்.

இதில் திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, தொகுதி பொறுப்பாளர் கேசவராஜ், எம்எல்ஏ மாணிக்கம் முன்னாள் எம்எல்ஏ ராமர் ஒன்றிய செயலாளர்கள் கரிகாலன், புழுதேரி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!