Skip to content

தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்… VSB துவங்கி வைத்தார்

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.அதன் ஒரு பகுதியாக, கரூர் வையாபுரி நகர் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தூய்மை பணியாளர்களுக்கு உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், ஆணையாளர் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் பணிபுரியும் 1,061 தூய்மைப் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெறுவர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு உணவு வழங்குவதற்காக 5 கோடியே 32 லட்ச

ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கு உணவை எடுத்துச் செல்ல ஏதுவாக இரண்டு பிரத்யேக பைகள் (Tiffin Box Bags) வழங்கப்படுகின்றன. ஒரு பையில் உணவைப் பெற்றுச் சென்ற பிறகு, அடுத்த நாள் அதைத் திரும்ப

ஒப்படைத்துவிட்டு மற்றொரு பையில் உணவைப் பெற்றுக்கொள்ளும் வகையில் எளிய முறை பின்பற்றப்படுகிறது

தூய்மைப் பணியாளர்கள் அதிகாலை 5:30 மணிக்கே தங்களது பணிகளைத் தொடங்குவதால், அவர்களின் உடல்நலத்தைக் கருத்தில்கொண்டு இந்த உன்னதமான திட்டத்தை முதலமைச்சர்

அவர்கள் செயல்படுத்தியுள்ளார். இந்தியாவிலேயே தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் முதல் மாநிலம் தமிழ்நாடு தான் என்ற பெருமையை அவர் உருவாக்கித் தந்துள்ளார். இதற்காகத் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் முதலமைச்சர் அவர்களுக்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளனர் என தெரிவித்தார்.

error: Content is protected !!