2026-ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, இன்று கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தி.மு.க மேற்கு மண்டலப் பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

