நடைபெற்று முடிந்த பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன். கழகத் தலைவர் முதல்வர் ஸ்டாலின் சீரிய வழிகாட்டுதலின்படியும் நலத்திட்டங்கள் வாயிலாகவும் கடந்த ஆண்டை விட அதிகமாக, 95.2% அளவில் மாணவச் செல்வங்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் . என்பதையும், கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 30வது இடத்திலிருந்த கரூர் மாவட்டம் இன்று 15வது இடத்திற்கு முன்னேறி உள்ளதையும், கோவை மாவட்டம் 13வது இடத்தை அடைந்துள்ளதையும் காணும் போது மகிழ்வடைகிறேன். தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் சிறிதும் மனம் தளராமல் அடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி வெற்றியடைய வாழ்த்துகிறேன்..
