குளித்தலை அருகே மைலாடி இரட்டை வாய்க்கால் பகுதியில் மணப்பாறை, மருங்காபுரி செல்லும் காவிரி குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய காட்சி

இந்த நிலையில் காவிரியில் இருந்து செல்லக்கூடிய குடிநீர் குழாய் குளித்தலை அருகே மைலாடி இரட்டை வாய்க்கால் பகுதியில் குழாய் உடைப்பால் காவிரி நீர் பெருக்கெடுத்து சாலை முழுவதும் பரவி வாய்க்கால் போல் ஓடியதால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து தலைமை நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார் நிறுத்தப்பட்டது.
இருப்பினும் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராட்சத குழாயிலிருந்து தேங்கிய காவிரி நீர் பெருக்கெடுத்து சாலையில் வீணாகி சென்றதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
