தமிழகத்தில் பல்வேறு ஆறுகளின் குறுக்கே அமைந்துள்ள 90 அணைகளின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். தற்போது 76.4 டி.எம்.சி. மட்டுமே நீர் இருப்பதால், 34 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து கொளுத்தும் வெயில் காரணமாக 63 அணைகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. இதில் 25 சதவீதத்துக்கும் குறைவான நீரே உள்ளது. மேலும் 17 அணைகளில் 17 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
63 அணைகளில் நீர்மட்டம் கவலைக்கிடம்.. வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கும் விவசாயிகள்
