Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருவெறும்பூரில் குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் தண்ணீர்

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே பர்மா காலனி எதிர்ப்புறம் உள்ள உய்ய கொண்டான் கரை பாலம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல மணி நேரமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. வெயில் காலம் என்பதால் ஏற்கனவே அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ள சூழ்நிலையில் தற்போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என அச்சமடைந்துள்ளனர். உடனடியாக இதனை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் எடுத்துக் கொண்டு உடைப்பு ஏற்பட்ட தண்ணீர் குழாயை அடைத்து சரி செய்ய வேண்டுமென அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!