Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இலவசங்கள் தராத ஒரே கட்சி நாங்கள் தான்! இலவசங்கள் ஒரு லஞ்சம்”- சீமான்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதற்கு முன் திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தனது குடும்பத்துடன் வருகை தந்தார். சரவணப் பொய்கை மலை அடிவாரத்தில் இருந்து பூஜை செய்யப்பட்ட வேலுடன் 365 படிகள் வழியாக நடந்து வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “முருகனை நம்பி தான் நான் போர்க்களத்துக்கு வந்து உள்ளேன். எனவே அவரிடம் சொல்லிவிட்டு தான் போக வேண்டும் என இங்கு வந்துள்ளேன். நல்ல ஆட்சி பிறக்க வேண்டும் என் நாட்டை மாற்ற வேண்டும் என தான் தேர்லுக்கு வந்து உள்ளேன். இன்று முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை தொடர்ச்சியாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளேன். எல்லா கட்சிகளுக்கும் ஒரே எதிர் கட்சி நாங்கள்தான்.இலவசங்கள் தராத ஒரே கட்சி நாங்கள் நான். அவர்கள் எல்லாம் சூலாயுதமாக  இருக்கிறார்கள். நாங்கள் வேலோடு இருக்கிறோம். இலவசம் என்பது ஒரு ஏமாற்றம், அது ஒரு லஞ்சம். நீண்ட காலமாக இலவசங்களை கொடுத்து உள்ளேனர். அதனை மாற்ற வேண்டும் என நடந்து வருகிறோம். மற்றவர்களை விட முன்கூட்டியே தேர்தல் பணிகளை தொடங்க காரணம் 50 ஆண்டுகாலமாக நாங்கள் மாற்ற வேண்டும் என நாங்கள் போராடி வருகிறோம். இன்று முதல் நான் எது தேர்தல் பிரச்சாரத்தை திருத்தணியில் இருந்து தொடங்குகிறேன்” என தெரிவித்தார்.

error: Content is protected !!