Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு

நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியா’ கூட்டணி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, சீதாராம் யெச்சூரி ஆகியோர் டெல்லியில் ஒன்று கூடி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த நாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழாவில் இதயப்பூர்வமான மரியாதை செலுத்தினர்.

கருணாநிதியை மாநில தலைவராக மட்டுமின்றி தேசிய அளவிலான தலைவராக போற்றி வணங்குகிறோம். தேசக் கட்டுமானத்தில் முக்கியப் பங்காற்றிய கலைஞர், கூட்டாட்சி மற்றும் மக்களாட்சிக்காக குரல் கொடுத்தவர். பல பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களை முடிவு செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் கலைஞர். நமது கூட்டணியின்வெற்றியை, இந்திய மக்களுக்கான வெற்றியை கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறோம்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!