மதுரை மாவட்டம் மருதங்குடியில் நடந்த திருமண விழாவில் முத்துசெல்வம் (19) என்பவருக்கும் வேப்பங்குளத்தைச் சேர்ந்த மாரீசுவரனுக்கும் (19) இடையே மோதல் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து மாரீசுவரன் தொலைபேசியில் முத்துசெல்வத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தார். இந்த நிலையில், நள்ளிரவில் முத்துசெல்வம் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது வீட்டின் மீது மாரீசுவரன் மற்றும் அவரது நண்பர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கினர்.
இந்த சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாக்குதல் நடத்திய மாரீசுவரன், ஆறுமுக்கடவுள், மணிகண்டன் ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.
