அனைத்து மாநிலங்களிலும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50% உயர்த்த வழிவகை செய்யும் புதிய தொகுதி மறுவரையறை மசோதாவின் நகல் வெளியானது.
2051 வரை மக்கள்தொகையின் அடிப்படையில் மாநிலங்களின் பிரதிநிதித்துவ விகிதத்தில் மாற்றம் இருக்காது, மகளிர் இடஒதுக்கீடு (33%) சட்டத்தை உடனடியாக அமல்படுத்த இது வழிவகுக்கும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவை, மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 50% அதிகரிக்கப்படும்.
மக்களவையின் மொத்த இடங்கள் 850 ஆகவும், சட்டப் பேரவைகளின் அதிகபட்ச வரம்பு 650 ஆகவும் உயர்த்தப்படும்.
2029 மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே புதிய தொகுதி மறுவரையறை வரைபடம் தயாரிக்கப்படும்.
மாநில வாரியான தொகுதிகளின் பிரதிநிதித்துவம் 1971 மக்கள்தொகையின் படியே தீர்மானிக்கப்படும்.
2011 மக்கள்தொகையின் படி, மாநிலத்திற்குள்ளான தொகுதிகளின் எல்லைகள்மாற்றியமைக்கப்படும்.
மக்களவை, சட்டப்பேரவைகளில் 33% இடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்படும்; இது 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.
