Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

செவிலியர் போராட்டத்தில் மனோ தங்கராஜுக்கு என்ன வேலை?- அமைச்சர் நிர்மல்குமார்

எல்லா துறையையும் விட எல்லா விதத்திலும் மோசமாக இருந்த துறை மின்சாரத்துறை என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், “தமிழகத்தில் வெயில் அதிகரிப்பதால் மின்தேவையும் அதிகரிக்கிறது. வரும் ஜூன் வரை சமாளிக்க வெளிச்சந்தையில் 4,500 மெகாவாட் மின்சாரம் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய 3,000 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவில்லை; பீக் ஹவர்சில் மின் தட்டுப்பாடு கூடாது என்பதற்காக வெளிச்சந்தையில் 4,500 மெகாவாட் கொள்முதல் செய்யப்படுகிறது.

செவிலியர்கள் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்பது தவறான தகவல். செவிலியர்கள் போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு என்ன வேலை?. அரசு எப்படி மனோ தங்கராஜ் கூட பேச்சுவார்த்தை நடத்தும்? தூய்மை பணியாளர்களின் போராட்டத்தில் ஆதரவு என்ற நிலைப்பாட்டை தான் நாங்கள் எடுத்தோம். அரசோடு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அன்று நாங்கள் கூறவே இல்லை அதை அரசியலாக்க பார்க்கவும் இல்லை. தற்போதைய செவிலியர்களின் போராட்டத்தில் மனோ தங்கராஜ் உடன்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால், அவர் அந்த துறையில் அமைச்சர் பதவி வகித்தாரா இதற்கு முன்பு? செவிலியர் போராட்டத்திற்கும் மனோ தங்கராஜுக்கும் என்ன சம்பந்தம். எல்லா துறையையும் விட எல்லா விதத்திலும் மோசமாக இருந்த துறை மின்சாரத்துறை. ஒரு லட்சத்து 40ஆயிரம் பேர் பணியில் இருக்க வேண்டிய இடத்தில் 70 ஆயிரம் பணியாளர்கள்தான் இருக்கிறார்கள். இன்னும் 10 நாட்களில் சிறப்பான ஒரு திட்டக் கொள்கை வெளியிடப்படும். இதுவரை ஒரு லட்சம் வீடுகளில்தான் சூரிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்துபவர்கள் 1,500 பேர் இருக்கிறார்கள். சூரிய மேற்கூரை அமைக்க 2 வாரத்தில் 20 ஆயிரம் விண்ணப்பம் வந்திருக்கிறது. அதில் 15 ஆயிரம் சூரிய மேற்கூரை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!