தமிழகத்தில் ஏப்ரல் 23-ந் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவை தனித்தனியாக கூட்டணி அமைத்துக் கொண்டும், தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தும் களம் காண்கின்றன.
தற்போது வரை, தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளில் மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. என்றாலும், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒரே தொகுதியில் பெண்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
அந்த தொகுதி எதுவென்றால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் (தனி) தொகுதியாகும். இந்தத் தொகுதியில், தி.மு.க. சார்பில் இந்திராணியும், அ.தி.மு.க. சார்பில் பி.சத்யபாமாவும், த.வெ.க. சார்பில் கவுரி சித்ராவும், நாம் தமிழர் கட்சி சார்பில் திவ்யாவும் களம் காண்கின்றனர்.
இதே மாவட்டத்தில் உள்ள மற்றொரு தொகுதியான அவினாசியில் (தனி), தி.மு.க. சார்பில் டாக்டர் கோகிலா மணியும், த.வெ.க. சார்பில் கமலியும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகாவும் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. கூட்டணியில் இந்தத் தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.விலும் பெண் வேட்பாளர் களம் இறக்கப்பட்டால், இந்தத் தொகுதியும் மேற்கண்ட பட்டியலில் இணைந்துவிடும்.

