தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் களத்தில் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள இந்த அதிரடி அரசியல் சூழலில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திடீரெனச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய ரஜினிகாந்த், “தேர்தல் முடிவுகளுக்கு பின் என்னை பற்றி விமர்சனங்கள் பரவியது. விமர்சனங்களுக்கு பதிலளிக்கவில்லை என்றா அது உண்மையாகிவிடும். விஜய் முதல்வராகக்கூடாது என நான் முயற்சித்ததுபோல் விமர்சனம் வெளியானது. இரண்டு கட்சிகளை சேர்த்து வைக்க நான் பேசியதாக சொல்கிறார்கள். அந்த தரங்கெட்ட வேலை செய்பவன் நான் இல்லை. விஜய் முதலமைச்சராவதில் எனக்கு என்ன பொறாமை? அவர் வென்றதில் எனக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம். நண்பன் என்ற முறையில், நட்பு ரீதியாகதான் ஸ்டாலினை சந்தித்தேன். விஜய் வெற்றி பெற்றபின் எக்ஸ் தளத்தில் வாழ்த்தினேன். விஜய் மீது எனக்கு பொறாமை என பரப்புகின்றனர். தவெக தொண்டர்கள் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். மக்களுக்கு விஜய் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனக்கும் விஜய்க்கும் 28 வயது வித்தியாசம். எம்ஜிஆர், எண்டிஆரை விட பெரிய வெற்றிபெற்றுள்ளர் விஜய். சம்பிரதாயத்துகாக விஜயை சந்திப்பதில் எனக்கு விருப்பமில்லை. கமல் முதல்வராகியிருந்தால் கூட எனக்கு பொறாமை வந்திருக்குமா? என தெரியவில்லை. 2001ல் அரசியலுக்கு வந்திருந்தால் நான் 100% வென்றிருப்பேன். மக்கள் மாற்றம் வேண்டும் என நினைத்த சமயத்தில் விஜய் வந்துள்ளார். விஜய்க்கு 100% சினிமா புகழ் கைக் கொடுத்துள்ளது. அரசியல் வேறு நடிப்பு வேறு. அரசியல் அவ்வளவு எளிதானது. தவெக தொண்டர்கள் செய்யும் சிறு தவறு கூட விஜயை பாதிக்கும். கிடைப்பது கிடைக்காமல் இருக்காது. கிடைக்காமல் இருப்பது கிடைக்காது. ஜெயலலிதா விருப்பப்பட்டதால் அவரது பதவியேற்பில் மட்டும் பங்கேற்றேன்” என்றார்.
