பாலிவுட் முன்னணி நடிகர்களான அக்சய் குமார் மற்றும் சயிப் அலிகான் சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ள ‘ஹைவான்’ திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரியதர்ஷன் இயக்கத்தில், மலையாளத்தில் வெளியான ‘ஒப்பம்’ படத்தின் தழுவலாக உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் செப்.11-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது இத்திரைப்படத்தின் அதிரடி காட்சிகள் நிறைந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
