Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாட்டில் RSS ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி!

கோர்ட்டில் சாட்சியம் அளிக்க காவல்துறை சீருடை கட்டாயம்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்புச் சூழலை ஒப்பிட்டுக் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற நீதிபதி லட்சுமி நாராயணன், தமிழ்நாட்டில் ஊர்வலத்திற்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது “ஜம்மு-காஷ்மீரிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள நிலையில், அங்கு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்படும்போது, அமைதிப் பூங்கா என அழைக்கப்படும் தமிழ்நாட்டில் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?

இந்த அரசில் திராவிடர் கழகம், தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். என அனைவருக்குமே அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர்கள் அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.” என நீதிபதி லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விவகாரத்தில், மனுதாரர்கள் அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கோரி, அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

error: Content is protected !!