Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டியிடுவது ஏன்?

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். குறிப்பாக களத்தில் நிற்கும் திமுக அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டனர் இந்த நிலையில் 2026 சட்ட மன்ற தேர்தலில் புது முகமாக நுழைந்து தமிழக வெற்றி கழகம் முதல் தேர்தலை சந்திக்க உள்ளது.கொள்கை எதிரி பாஜக அரசியல் எதிரி திமுக என பிரச்சாரம் செய்து கட்சியை தொடங்கிய விஜய்.ஆட்சி அதிகாரத்தில் பங்கு என முதல் பிரச்சாரத்திலேயே கூறினாலும்
தவெகவுடன் எந்தக் கட்சியும் கூட்டணியில் செல்லவில்லை. தற்பொழுது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகம் களத்தில் தனித்து நிற்கிறது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவரும் முதல்வர் வேட்பாளர் ஆன விஜய் இன்று தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார். இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளில் ஜோசப் விஜய் போட்டியிடுவதாக அவரே அறிவித்தார்.

இந்நிலையில்விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது ஏன் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

முதல்வர் வேட்பாளராக தேர்தலில் நிற்கும் விஜய் தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள,ஒரு தொகுதியில் பின்னடைவு ஏற்பட்டாலும் மற்றொன்றில் வெற்றி பெறும் வகையில் பெரம்பூர் ,திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு இடங்களில் போட்டியிட இருப்பதாக தெரிகிறது.

பெரம்பூர் தொகுதி

பெரம்பூர் தொகுதியை பொருத்தவரைதனி தொகுதியாக இருந்து 2008 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது பொது தொகுதியாக மாற்றப்பட்டது இதுவரை திமுக 9 முறையும் மார்க் லிஸ்ட் மூன்று முறையும் அதிமுக மூன்று முறையும் காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்ற தொகுதி ஆகும் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் 79,974வாக்குகள் பெற்று 599 வாக்குகள் உடைய திமுக கூட்டணி வேட்பாளரான பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் தனபால் தோற்கடித்தார் அதன் பிறகு கடந்த 2021 தேர்தலில் பெரம்பூர் தொகுதியை மீண்டும் கைப்பற்ற திமுக தீவிரமாக செயல்பட்டது. இதில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 105,267 வாக்குகள் பெற்றார். இந்த முறை அதிமுகவுடன் கூட்டணி வைத்து இரட்டை இலையில் போட்டியிட்ட தனபாலனை 54,976 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இப்படி திமுகவின் கோட்டையாக இருக்கும் பெரம்பூர், சென்னை மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாகும். 1,07,995 ஆண் வாக்காளர்கள், 1,14,726 பெண் வாக்காளர்கள் என மொத்தமாக 2,22,792 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் வாக்குகள் உள்ளது. குறிப்பாக இத்தொகுதியில் தவெகவுக்கு 45,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதனால் பெரம்பூர் தொகுதி விஜய்க்கு முதல் வாய்ப்பாக இருக்கிறது.

திருச்சி கிழக்கு தொகுதி

அடுத்தது, திருச்சி கிழக்கு தொகுதி கடந்த பல வருட சட்டமன்ற தேர்தல் வரை திருச்சி 1 என அழைக்கப்பட்டு வந்த இந்த தொகுதி, 2008ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு திருச்சி கிழக்கு என பெயர் மாற்றப்பட்டது. 1984, 1989ல் மலர்மன்னன், 1996, 2001ல் பரணிக்குமார், 2006ல் அன்பில் பெரியசாமி ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 2011ல் அதிமுகவைச் சேர்ந்த மனோகரன், 2016ல் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இதையடுத்து 2021 தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் 94,302 வாக்குகள் பெற்று 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லமண்டி நடராஜனை வீழ்த்தி திருச்சி கிழக்கில் வெற்றி வாகை சூடினார்.
இந்த தொகுதியில் 1,04,883 ஆண் வாக்காளர்கள், 1,12,460 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,17, 397 வாக்காளர்கள் உள்ளனர். கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் இருப்பதால் விஜய் இந்த தொகுதியை தேர்வு செய்திருக்கலாம் என தெரிகிறது.

இந்நிலையில் திருச்சிகிழக்குத் தொகுதியில் போட்டியிடுவதாக விஜய் இன்றுஅறிவித்ததை தொடர்ந்து திருச்சியில் உள்ள விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் உற்சாகமடைந்து உள்ளனர் திருச்சி பழைய பால்பண்ணை அருகில் தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அலுவலகம் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

error: Content is protected !!