Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தவெக ஆட்சி சரியுமா? ஜோதிடர் ஷெல்வி சொன்ன பகீர் எச்சரிக்கை!

முதல்வர் விஜயின் அரசியல் பயணம் மற்றும் அடுத்தடுத்த சவால்கள் குறித்து ஜோதிடர் ஷெல்வி கூறியுள்ளதாவது: ஜோசப் விஜய் கட்சி ஆரம்பித்து ஆயிரம் நாட்கள் கூட ஆகவில்லை. இரண்டரை ஆண்டுகாலத்தில் ஒரு கட்சியை விஜய் ஆரம்பித்து 60 ஆண்டுகால கட்சிகளை தோற்கடித்துள்ளார். அரசியலே தெரியாதவர்கள் கூட தற்போது எம்எல்ஏ ஆகியுள்ளனர். 100க்கு 100 சதவீத மக்கள் வேட்பாளர்கள் பெயர் கூட தெரியாமல் முழுக்க முழுக்க விஜய்க்காக ஓட்டு போட்டுள்ளனர். பெரும் புரட்சி ஏற்பட்டது.

பஞ்சாங்க அமைப்பில் பராபவ வருடம் என்பது 60 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரும். வலிமை மிக்க வருடமாக பராபவ வருடம் கருதப்படுகிறது. திராவிட கட்சிகளை மொத்தமாக ஒழித்து விஜய் வெற்றி பெற்றுள்ளார்.

மே 14 ஆம் தேதிக்குள் அவர் முதல்வராகப் பதவியேற்றுள்ளது ஜோதிடப்படி மிகவும் நன்மையாகும்.ஏப்ரல் 14 முதல் மே 14 ஆம் தேதி வரையிலான சித்திரை மாதத்தில் கடக ராசி லக்னத்தில் 10 ஆம் இடத்தில் சூரியன் உச்சமாகிறார். இந்த காலகட்டத்தில் விஜய் பதவியேற்பது தான் நல்லது என்பதால் அவர்கள் அவசர அவசரமாக பதவியேற்றனர்.9 என்பது செவ்வாய். வளர்ச்சிக்குண்டான விஷயம் என்பதால் முதல்கட்டமாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். ஜெயலலிதா பாணியில் விஜய் செய்துள்ளார்.

அஷ்டமி திதி என்பதை நிறைய பேர் தவறாகப் பார்க்கிறார்கள். ஆனால், அஷ்டமி திதி என்பது பெரிய வெற்றிகளையும், அதிர்ஷ்டங்களையும் கொடுக்கக் கூடியதாகும்.

வரக்கூடிய காலத்தில் விஜய், உதயநிதி, அண்ணாமலை என்கிற 3 முகங்களை வைத்து தான் தமிழக அரசியல் பேசப்படும். நான்கு முனை, ஐந்து முனை போட்டி என எவ்வளவு வந்தாலும் இந்த 3 பேருக்குள் தான் மிகப்பெரிய அரசியல் நகரும்.

புதிய ஆட்சியை நடத்துவார் விஜய்.எல்லாவற்றையும் சரியாக நடக்க வேண்டும் என்று நினைப்பார்.மக்களிடம் இருந்து கெட்ட பெயர் வருவதற்கு விடமாட்டார். ரவுடிசம், கட்ட பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான செயல்கள் போன்றவை நடக்காது

தற்போது நடக்கும் குரு புத்தியால் விஜய் உடன் இருப்பவர்கள், கட்சிக்காரர்களின் ஆர்வ கோளாறால் விஜய்க்கு சங்கடங்களையும் கெட்ட பெயரையும் ஏற்படுத்தும். காங்கிரஸ் கட்சியால் விஜய்க்கு பல பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். உடன் இருப்பவர்கள், மந்திரிகள் விஜய்யை ஏமாற்றலாம் என்று நினைத்தாலும் எதுவும் நடக்காது. அனைத்து கண்ரோலையும் விஜய் தன்னிடமே வைத்திருப்பார். கூடிய விரைவில் ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்டுக்கு வேறு உயர்ந்த பதவி கொடுப்பார்.

2027 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி வரை முதல்வர் விஜய்க்கு சிறு சிறு தடைகள் காணப்படும். அந்த தடங்கல்களை தாண்டிவிட்டால் போதும். ஆரோக்கியத்தை விஜய் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகளவு அழுத்தம், கோபப்படாமல் எல்லாவற்றையும் கையாளுவது நல்லது. உணவு விஷயத்தை பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை பார்த்துக் கொண்டாலே வேறு எந்தவிதமான பெரிய பிரச்சனையும் அவருக்கு வராது. விஜயின் ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு இப்போது இல்லை என்று கூறினார்.

error: Content is protected !!