கஞ்சா விற்ற பெண் கைது
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கொத்தமங்கலம் குடித்தெரு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது குடித்தெரு பெரிய கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது மனைவி பாலம்மாள் (வயது 67) என்பவர் கஞ்சா விற்றுக கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
பிறகு அவரை ஜாமினில் விடுதலை செய்தனர்.
போதை மாத்திரை விற்பனை செய்த வாலிபர் கைது
திருச்சி பாலக்கரை பெல் சி மைதானம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது காஜா பேட்டை மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த சந்துரு (வயது 32) என்பவர் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சந்துருவை கைது செய்து அவரிடமிருந்து 400 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரை ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
அனுமதியின்றி மது பாட்டில் விற்றவர் கைது
திருச்சி கொட்டப்பட்டு எப் டைப் ரெயில்வே குடியிருப்பு பகுதியில் அனுமதி இன்றி மது பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொன்மலை இன்ஸ்பெக்டர் பெரியசாமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு கொட்டப்பட்டு அம்பாள் நகரை சேர்ந்த சிவக்குமார் (வயது 39)என்பவர் அரசு அனுமதி இன்றி மது பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.இதையடுத்து சிவகுமார் நீதிமன்ற ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த முதியவர் மாயம்
திருச்சி மாவட்டம் முசிறி ரத்தன நகரை சேர்ந்தவர் சேட்டு (வயது 70) இவர் காது கேளாதவர். இவருக்கு அடிக்கடி மூச்சு திணறல் ஏற்படும். இதைய டுத்து கடந்த 22ந் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அரசு மருத்துவமனையில் மூன்றாவது மாடியில் இருந்த சேட்டு திடீரென்று மாயமாகி விட்டார்.இது தொடர்பாக அவரது மனைவி சரோஜா அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சேட்டுவை தேடி வருகின்றனர்.

