Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண்… பரபரப்பு

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் அருகே ஒரு பெண் முககவசம் அணிந்து காரை தண்டவாளத்தில் வேகமாக ஓட்டி கொண்டு வந்தார். இதனை கண்ட ரயில்வே ஊழியர்கள் அவரை நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் நிற்காமல் சென்றநிலையில் அவ்வழியாக  பெங்களூரில் இருந்து ஐதராபாத் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் வந்த நிலையில் லோகோ பைலட்டை எச்சரிக்கை செய்து ரயிலை நடு வழியிலேயே நிறுத்தப்பட்டது.

Video: Tipsy woman drives car on railway track; train movement on  Shankarpally–Hyderabad line disrupted

இதனையடுத்து ஷங்கர்பள்ளி போலீசார் , ரயில்வே ஊழியர்கள், பொது மக்களுடன் இணைந்து காரை நிறுத்தி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். பின்னர் காரையும்  சாலைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பெங்களூர் – ஐதராபாத் ரயில் அனுப்பி வைக்கப்பட்டது.  அந்தப் பெண் ஹிந்தியில் பேசக்கூடிய நிலையில் அவர் எதற்காக இவ்வாறு செய்தார் குடிபோதையில் உள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!