Skip to content

பெண் மயங்கி விழுந்து சாவு. மது விற்பனை- 3 பேர் கைது… திருச்சி க்ரைம்

அனுமதியின்றி மது விற்பனை- 3 பேர் கைது

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில் விற்பனை செய்து வருவதாக கண்டோன்மென்ட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது திருவெறும்பூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த வெங்கடேஷ் (47)என்பவர் மதுபாட்டில் விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் வெங்கடேசை கைது செய்து அவரிடமிருந்து 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அனுமதியின்றி மது பாட்டில் விற்ற தில்லைநகர் சின்னசாமி நகரை சேர்ந்த முகமது மாலிக் பாஷா (36)ஆழ்வார் தோப்பு பகுதியை சேர்ந்த முகமது சலீம் (42) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இளம்பெண் மயங்கி விழுந்து சாவு

திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகரை சேர்ந்தவர் சந்துரு இவரது மனைவி வினயாஸ்ரீ. இவர்களுக்கு சுனோத்ரா தேவி (4) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வினயாஸ்ரீ குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் உடல் பருமனால் அவதிப்பட்டு வந்தார். மேலும் இவர் சற்று மனநலம் குன்றியவர். கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 ந்தேதி தனது வீட்டில் மது அருந்திய போது அவரது வாயிலிருந்து நுரை வந்து வீட்டில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாத்ரூமில் பெண் மயங்கி விழுந்து சாவு

திருச்சி பீமநகர் கண்டி தெருவை சேர்ந்தவர் அப்துல் கான். இவரது மனைவி ஷர்பு நிஷா (52).இவர் குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று ஷர்பு நிஷா குளியல் அறையில் மயக்க கிடந்தார். இதையடுத்து அவரை ஆபத்தான நிலையில் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் குழுவினர் ஷர்பு நிஷா இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!