Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கழிவறைக்குள் சடலமாக கிடந்த பெண்.. இளம்பெண் மாயம்… திருச்சி க்ரைம்

ஏர்போர்ட்டில் இளம் பெண் மாயம்

திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் மரியா வேளாங்கண்ணி (வயது 25) இவரதுகணவன் ரிச்சர்டு. திருமணமாகிஆறு வருடம் ஆகிறது.குழந்தை இல்லை. ரிச்சர்டு மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த காரணத்தால் தனது கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் மரிய வேளாங்கண்ணி வசித்து வந்தார்.இந்நிலையில் கடந்த 15 ந் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மரிய வேளாங்கண்ணி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் டெய்சி ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மரிய வேளாங்கண்ணியை தேடி வருகின்றனர்.

புதூரில் தனியார் நிறுவனத்தில் மின் வயர் திருட்டு

மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு திருச்சி ஏப்ரல் 17 திருச்சி பஞ்சப்பூர் பெரியார்ஒருங்கிணைந்து மார்க்கெட் பகுதியில் தனியார் கம்பெனி உள்ளது இந்த கம்பெனியில்இருந்த 120 மீட்டர் மின் வயர்ரை வருமா சாமிகள் திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அந்த தனியார் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி சதாம் உசேன் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மின் வயர்ரை தேடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

கழிவறைக்குள் சடலமாக கிடந்த பெண்

திருச்சி மேல கல்கண்டார் கோட்டை காமராஜர் ரோடு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகள் செல்வி (வயது 56) வீட்டில் இவர் மட்டும் தனியாக வசித்து வந்தார் இந்நிலையில் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து இவரது வீட்டிற்கு எதிரே ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் சந்திரசேகரன் என்பவரிடம் செல்வி நிலைமையை கூறியுள்ளார். அதற்கு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதாக கூறினார். ஆனால் செல்வி பார்த்து கொள்வோம் என்று கூறி வீட்டில் இருந்து வந்தார் இந்த நிலையில் வீட்டின் கழிவறையில் செல்வி பிணமாக இறந்து கிடந்தார்.இது குறித்து சந்திரசேகரன் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கழிவறையில் பிணமாக கிடந்த செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

போதை மாத்திரை விற்பனை.. 2 பேர் கைது

திருச்சி ஏப்17 – திருச்சி பாலக்கரை பெல்சி கிரவுண்ட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது காஜாபேட்டை பசுமடம் பகுதியை சேர்ந்தவர்கள் பிரகாஷ்ராஜ் (வயது 20) சபரி ராகவன் ஆகிய இருவரும் போதை மாத்திரை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது ப இதையடுத்து போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் ஊசி பாட்டில்களை பரிந்துரை செய்துள்ளனர்.
எடமலைப்பட்டி புதூரில்

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பஞ்சப்பூர் சோலார் பேனல் பின்புறம் உள்ள வயல்வெளியில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அழகிய நிலையில் இறந்த கிடந்தார்.இறந்து கிடந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ?என்ற முழு விவரம் தெரியவில்லை. தகவல் அறிந்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகிய நிலையில் கிடந்த முதியவர் உடலை மீட்டு அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!