Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வீட்டு வேலைக்குச் சேர்ந்த பெண் நகை, பணம் திட்டு-கணவனுடன் கைது

குமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி 63 வயதான பாக்கியபாலா. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூவரும் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். பாக்கியபாலா நான்கு பேரக்குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

பேரக்குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்காக, ஒரு மாதத்திற்கு முன்பு தனியார் அறக்கட்டளை மூலம் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த 47 வயதான முத்துசபியா என்ற கவிதாவை வீட்டு வேலைக்கு சேர்த்துள்ளார்.

கடந்த மாதம் 28ஆம் தேதி பாக்கியபாலா வங்கியில் அடமானம் வைத்திருந்த 15 சவரன் நகைகளை மீட்டு வந்து பீரோவில் வைத்துள்ளார். கடந்த 8ஆம் தேதி பீரோவை திறந்து பார்த்தபோது நகைகளும் ரூ.65,500 பணமும் மாயமாகியிருந்தது. இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய விசாரணையில், பீரோவில் பதிவாகியிருந்த கைரேகை முத்துசபியாவுடையது என தெரியவந்தது. மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடந்த 6ஆம் தேதி ரத்தப் பரிசோதனைக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய முத்துசபியா, பின்னர் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் கைப்பையை கொடுத்தது தெரியவந்தது.

விசாரணையில் அந்த நபர் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஹசன் என்பதும், அவர் முத்துசபியாவின் இரண்டாவது கணவர் என்பதும் தெரியவந்தது. ஹசனிடம் நடத்திய விசாரணையில், முத்துசபியா தன்னிடம் 15 சவரன் நகைகள் மற்றும் ரூ.65,500 பணத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து முத்துசபியா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கணவர் ஹசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் வீட்டு வேலைக்கு சேர்வது போல் நடித்து பல்வேறு வீடுகளில் திருடியுள்ளனரா என்பது குறித்தும், முத்துசபியாவை வேலைக்கு அனுப்பிய அறக்கட்டளை ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!