Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காதலனை கட்டி போட்டு தீ வைத்து கொன்ற பெண்..பெங்களூருவில் கொடூரம்

பெங்களூருவில் மேற்கத்திய பாணியில் காதலை வெளிப்படுத்துவதாக கூறி காதலனை எங்கும் நகர்ந்து செல்ல முடியாதபடி கட்டி வைத்து, தீ வைத்து எரித்து கொன்று கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. பெங்களூரு அஞ்சனாபுரா பகுதியை சேர்ந்த கிரண் மற்றும் பிரேமா ஆகியோர் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தனது தாயும், சகோதரனும் வெளியே செந்திருந்த நேரம் பார்த்து காதலன் கிரணை வீட்டிற்கு வருமாறு அழைத்து உள்ளார். கிரண் அங்கு சென்ற பின், அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க போவதாக கூறி கிரணின் கண்களை முதலில் கட்டி வைத்து ஒரு நாற்காலியில் அமர வைத்து உள்ளார்.

பின்னர் அவரை ஒரு கயிற்றால் நாற்காலியுடன் நன்கு பிணைத்து கட்டி வைத்து உள்ளார். எதற்கு இப்படி செய்கிறாய் என்று கிரண் தொடர்ந்து கேள்வி எழுப்பிய போது மேற்கத்திய பாணியில் காதல் சர்ப்ரைஸ் கொடுக்க போவதாக கூறி உள்ளார். இதனை முற்றிலும் உண்மை என நம்பிய கிரண், காதலி பிரேமா செய்ய சொன்ன நடவடிக்கைகளுக்கு முரண்டு பிடிக்காமல் ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறார். பின்னர் எதிர்பாரா விதமாக நாற்காலியில் கட்டி வைத்த காதலன் கிரண் மீது தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து உள்ளார்.

இதில் உடல் கருகிய கிரண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் கொடூர செயலில் ஈடுபட்ட பிரேமாவை கைது செய்தனர். ஏன் இந்த கொடூர செயலை செய்தார் என்று பிரேமாவிடம் போலீசார் விசாரித்த போது கடந்த சில நாட்களாக தன்னிடம் பேசுவதையும், தன்னை சந்திப்பதையும் கிரண் முற்றிலும் தவிர்த்து வந்ததாகவும், அதற்கான காரணம் கேட்ட போது கூட சரியாக சொல்லாததால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் மற்றும் கடும் சண்டை ஏற்பட்டு வந்ததாகவும் கூறினார். அடிக்கடி இதுபோல நிகழ்ந்தால் தான் காதலன் கிரண் மீது ஆத்திரத்தில் இருந்ததாகவும், இதனால் தான் தற்போது அவரை கொலை செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள பிரேமா கூறி இருக்கிறார்.

காதலனை வீட்டிற்கு வரவழைத்து திட்டமிட்டு கொடூரமாக காதலியே எரித்து கொன்றுள்ள சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபகாலமாக கிரண் தனக்குப் போதுமான கவனம் கொடுக்கவில்லை என்றும், தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டார் என்று தனக்கு உள்ளுணர்வு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் தான் இப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டதாகவும் பிரேமா கூறியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

error: Content is protected !!